இலங்கை வரலாற்றில் மிக மோசமான தலைவர் மகிந்த ராஜபக்ச என பௌத்த பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவினால் புதிதாக ஆரம்பிக்கப்ட்ட பௌத்த பிக்குகள் முன்னணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பௌ;த பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் கொலன்னே சாந்தஸ்ரீ தேரர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டைம மிக மேசாமான அழிவினை நோக்கி கொண்டு செல்வதாகவும் இலங்கை வரலாற்றில் உருவான மிக மோசமான தலைவராக அவரே விளங்குவதாகவும் கொலன்னே சாந்தஸ்ரீ தேரர் குறிப்பிட்டுள்ளார் இங்கு கருத்து வெளியிட்ட முன்னணியின் தலைவர் மாலபே சீலாரட்ன தேரர் மகிந்த ராஜபக்சவை பதவி நீக்குவதற்காக வீதியில் இறங்கி போராடுவதற்கு மாகசங்கம் தயாராகவுள்ளதாகவும் இலங்கை வரலாற்றில் மிக கொடுராமான தலைவராக மகிந்த ராஜபக்ச விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார் இதேவேளை இலங்கையை பௌத்த நாடாக கட்டியெழுப்பப் போவதாக கூறி அரசியல் நடத்த முற்பட்ட ஜாதிக ஹெல உருமய தமது கோட்பாடுகளை கைவிட்டு அரசியல் சுயலாபத்திற்காக மகிந்த ராஜபக்சவின் கீழ் தரமான அரசியல் நடவடிக்கைகளுக்கு துணைபோவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்