மன்னார் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இன்று காலை விமானத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் புலிகளின் இனங்காணப்பட்ட மூன்று இலக்குகள் மீது இன்று விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா விமானப்படையினர் இன்று காலை நடத்திய இவ்விமானத்தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமானி உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஊடக மையம் மேலும் தெரிவித்துள்ளது.