தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலான ஒற்றுமை தொடர்பாக விடுதலைப் புலிகள் உறுதியுடன் இருப்பதாக த.தே.கூட்டமைப்பு எம்.பி எம். இமாம் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
அமரர் சிவநேசனின் மரணச்சடங்கில் பங்கேற்க கிளிநொச்சி சென்றிருந்தபோது தலைவர் பிரபாகரனையும் சந்திக்கக் கிடைத்தது.
மவை சேனாதிராஜா எம்பி. என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாh. அவருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினோம். தமிழ், முஸ்லிம் ஒற்றுமைப் பற்றி இதன் போது அவர் குறிப்பிட்டார். சந்திப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்ர்.
புலிகளின் அரசியல் துறைப் பெர்றுப்பாளர் நடேசனுடனும் இது குறித்து மேலதிகமாக கலந்துரையாடுமாறு தலைவர் பிரபாகரன் என்னிடம் கூறினார்.
இதனடிப்படையில் நடேசனுடனும் கலந்துரையாடினேன். தமிழ் முஸ்லிம் ஐக்கியம் குறித்து அவரும் கூறினார். இரு சமூகங்களும் புரிந்துணர்வுடன் வாழவேண்டிய அவசியம் குறித்து அவர் சுட்டிக் காட்டினார்.
என்னை எம்.பி. பதவிக்கு நியமிக்க வேண்டாமென புலிகள் தரப்புக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் குறித்தும், எனினும் அவற்றை புறக்கணித்து விட்டு என்னையே எம்.பி.யாக நியமிக்க மேற்கொண்ட தீர்மானம் குறித்தும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைமை மற்றும் அவர்களின் அரசியல் துறைப் பொறுப்பாளருடனான சந்திப்பானது தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு புது அத்தியாயத்தை தோற்றுவித்திருப்பதாக நான் கருதுகிறேன்.
இச்சந்திப்பு மூலமாக விடுதலைப் புலிகள் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை மற்றும புரிந்துணர்வில் உறுதியுடனும் தெரிவுடனுமிருப்பதை தான் உணர்ந்து கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.