பாகிஸ்தானின் உயர் மட்டத் தூதுக்குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறது. பாகிஸ்தான் வெளிநாட்டு அலுவல்களுக்கான நிரந்தர செனட் நிறைவேற்றுச் சபையைச் சேர்ந்த தூதுக் குழுவே இன்று இலங்கை வரவுள்ளதாக பாராளுமன்றத்தின் வெளியுறவுப் பணியகம் அறிவித்துள்ளது.
10 பேரைக் கொண்ட இத்தூதுக் குழுவுக்கு முஷேக் ஹ{சைன் சஹீத் தலைமை தாங்குகிறார். இக்குழுவினர் இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியிருப்பர்.
இலங்கை விஜயம் செய்யவுள்ள இக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைசந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் பஷீர் வாலி முகம்மதுவும்; இந்த தூதுக்குழுவில் இடமபெற்றுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.