கிழக்கு மாகாணத்தில் உள்ள விகாரைகளை புனரமைக்கவென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பௌத்த பெருந்தொகை பணத்தை பௌத்த பிக்குகளிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளின் எல்லைகளில் உள்ள பௌத்த வணக்கஸ்தலங்களை புனரமைக்குமாறும் அப்பகுதியில் மேலதிக சிங்கள மக்களையும் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பௌத்த பிக்குகளுக்கு பணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து கிழக்கு மாகாணம் முற்றாக மீட்க்கப்பட்டுள்ளதாகவும் எனவே சிங்கள் மக்கள் புலிகள் தொடர்பில் அச்சம் கொள்ளதேவையில்லையெனவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பௌத்த தலங்களை புனரமைப்பதற்கு முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபாயை வழங்குவதாகவும் பின்னர் அதற்கான மதிப்பீடுகளின் அடிப்படையில் மீகுதி ஒதுக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தந்திரோபாய பின்வாங்களின் பின்னர் கிழக்கின பாரம்பரிய தமிழ் பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவும் சிங்கள குடியேற்ற திட்டங்களாகவும் மாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.