கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் இடம்பெற்றால் தாம் அதில் போட்டியிட தயாராக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில்,
திருகோணமலை,மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய தேர்தலகளில் ஐக்கிய தேசிய கட்சிக்கே கூடுதலான வெற்றிவாய்ப்பு உள்ளது.
இதன்மூலம் மாகாணசபையை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் என்பது எங்களது பூரண நம்பிக்கையாகும்.
இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் எமக்கு பூரண ஆதரவு வழங்கும் என நம்புகின்றோம்.
அதற்கு அரசு இப்பகுதியில் ஜனநாயக நிலைதோற்றுவிக்கப்படவேண்டும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும். அதற்காக ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு ஜனநாயக சூழலை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.
இதன் மூலம் ஜனநாயக சூழ்நிலையை அப்பகுதியில் ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.