இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே எதிராக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை சென்னையில் தியாகராஜ நகரில் இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில், நடைபெற்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே எதிராக உள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் அமையக் கூடாது என்பதில் இந்திய மத்திய அரசு மிக உறுதியாக உள்ளது. இதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.
இதனால் ஏதாவது முத்திரை குத்திவிடுவார்கள் என எவரும் அச்சப் படத்தேவையில்லை என விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மேலும் கூறியுள்ளார்.