இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின், உதவிப் பணிப்பாளர் அநுரசிறி ஹெட்டிகே இன்று காலை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.
இவர் கூயரி ஆயுதத்தால், கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காயங்களுடன் ஹெட்டிகேவிற்கு தற்போது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் மேர்வின் சில்வா அத்துமீறி தாக்குதல் நடத்தியதன் பின்னர் அமைச்சர் உள்ளிட்ட குண்டர்கள் ரூபவாஹினி ஊழியர்களினால் விரட்டியடிக்கப்பட்டனர்.
அந்தச் சம்பவத்தின் பின்னர் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிபுரியும் மூன்றாவது ஊழியர் தாக்கப்பட்டுள்ளார்.
இதுவரையில் மூன்று ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ள போதிலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.