மன்னார் மூர் வீதி பகுதியில் இன்று காலை சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்தினர்.
இச் சம்பவம் மன்னார் மூர் வீதி பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
இதன் போது மூர்வீதியில் உள்ள காட்டுப்பள்ளிவாசல் அதனை அண்டிய கடற்கரை பகுதிகள் ஆகியவற்றிக்கும் சென்ற படையினர் அங்கு சோதனைகளை மேற்கொண்டனர்.இத்தேடுதல் காலை 11 .00 மணிவரை இடம்பெற்றது. ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை.