யாழ் தென்மராட்சி கச்சாய் சந்திக்கு அருகாமையில் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை பயன்படுத்தி தகவல்களை சேகரிப்பதில் படையினர் மும்மரமாக ஈடுபடுகின்றனர்.
இச் செய்தி தொடர்பாக தெரியவருகையில்
குறிப்பிட்ட விளையாட்டு மைதானத்தில் மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சமயம் சிறிலங்காப் படையினரும் சேர்ந்து விளையாட்டில் ஈடுபடுவதாக காட்டி தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்காக மதுபானப் பொருட்களைக் மாணவர்களிற்கு கொடுப்பதுடன் விளையாட்டுப் பொருட்களையும் வாங்கிக்கொடுத்து தகவல்களை நாளாந்தம் விளையாட்டு நேரங்களில் படையினர் சேகரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.