யாழ் அல்லைப்பிட்டிக்கும் குருநகருக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் சிறிலங்காப் படையினர் பொதுமக்களை இலக்குவைத்து நடத்திய
துப்பாக்கிச்சூட்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
செல்வராசா கோடீஸ்வரன் (28) என்பவர் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தில் கே.சுதாகரன் என்பவர் படுகாயமடைந்தநிலையில் யாழ் போதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐந்துபேரையும் சிறிலங்காப்படையினர் தீவிரவிசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.