சிறிலங்கா தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் முதியவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் வசித்து வந்த கோவிந்தசாமி ராஜநாதன் (வயது 65) என்ற முதியவரை வெள்ளை வானில் வந்தவர்கள் காவல்துறையினர் என்று அடையாளப்படுத்தி கடத்திச் சென்றுள்ளனர்.
கொட்டாஞ்சேனை சிறிலங்கா காவல் நிலையத்திற்கு அவரது உறவினர்கள் சென்றபோதும் தாங்கள் அவரை கைது செய்யவில்லை என்று அங்கிருந்த காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து அவரது உறவினர்கள் மக்கள் கண்காணிப்புக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திலும் இவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.