கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை இன்று வெள்ளிக்கிழமை இலங்கையரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3ஆம் திகதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருகோணமலை மாவட்டம்,அம்பாறை மாவட்டம்,மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தல் தொடர்பில் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு எதிர்வரும் நாட்களில் அறிவுறுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் தொடர்பான திகதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.