மணலாறு கொக்குதொடுவாயில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.இம்முறியடிப்பு தாக்குதல் காரணமாக 15 படையினர் கொல்லப்பட்டதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னகர்வுத் தாக்குதலை நடத்தினர்.
இம் முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி, படையினரின் நகர்வினை முறியடித்துள்ளனர்.
இத்தாக்குதலில் 15-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளனர்.
இதில்
லோ வகை கணை செலுத்திகள் - 02
ரி-56 - 2 ரக துப்பாக்கிகள் - 02
ஏகே எல்எம்ஜிக்கள் - 02
தொலைத்தொடர்புக் கருவி - 01
மற்றும் ரவைகள்இ வெடிபொருட்கள்
ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.