தாயக விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் விபரம், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
2ஆம் லெப்ரினன்ட் கார்முகில் அல்லது வடிவழகி என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த விஸ்வச்சந்திரன் நவநிதா, 2ஆம் லெப்ரினன்ட் அமுதமதி அல்லது வண்ணவாகை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெயலலிதா, 2ஆம் லெப்ரினன்ட் குழலினி என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நாகராசா தவச்செல்வி, 2ஆம் லெப்ரினன்ட் தமிழ்நேயன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தங்கையா கிருபாகரன், வீரவேங்கை ஒளியேந்தி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கருணாகரன் சந்திரகுமார் ஆகிய போராளிகள், நேற்று வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை, மேஜர் திருக்குமரன் என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பொன்னம்பலநாதர் தினேஸ்குமார், கப்டன் அகல்வேங்கை என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் மேகலன், லெப்ரினன்ட் செந்தூரி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த குணசிங்கம் தர்சினி, 2ஆம் லெப்ரினன்ட் அகன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த பாலகிரு~;ணன் சிறீபாலன், 2ஆம் லெப்ரினன்ட் இளவரசன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த இராசலிங்கம் ரஞ்சித்குமார், 2ஆம் லெப்ரினன்ட் தூயமதி என்றழைக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த தில்லைநாதன் சுமலதா, வீரவேங்கை பாமதி என்றழைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முருகேசு ரஜிதா ஆகிய போராளிகள் வீரச்சாவெய்தியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, லெப்ரினன்ட் எழில்நிலா அல்லது எழிலமுது என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சித்திரன் கலைமதி என்ற போராளி, வீரச்சாவைத் தழுவியுள்ளார்.