மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா படைத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் லெப்.ணேல் கீர்த்தி ரணவக்க எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 58வது படைப்பிரிவின் கவச வாகன அணியின் பொறுப்பதிகாரியாக இருந்த இவர் மன்னார் முன்னரங்க நிலைகளைப் பார்வையிடச் சென்றபோது பொறிவெடியில் சிக்கி படுகாமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிற்சைகள் பலனின்றி பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த படை அதிகாரி கவச வாகன அணிக்குப் பொறுப்பாக இருந்தபோது கப்டன் நிலையில் இருந்து மேஜராக நிலைக்குப் பதவி உயர்வு பெற்றிருந்தார். இவர் உயிரிழந்த பின்னர் சிறீலங்கா படைத்துறையால் லெப்.கேணல் நிலை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.