முல்லைத்தீவுகு வட கிழக்கே அமைந்துள்ள இரணைமடு , விசுவமடுப் பகுதியில் இனங்காணப்பட்ட விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றை இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்கள் திடீர் விமானத்தாக்குதல் மூலம் நிர்மூலம் ஆக்கி உள்ளதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் இன்று காலை 6.10 அளவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இலக்குகள் நிர்னயம் செய்யப்பட்டதாகவும் தாக்குதலின் பின்னர் தளம் திரும்பிய விமானத்தின் விமானி தெரிவித்துள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.