விழிப்புலனற்றோரின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நான்கு மில்லியன் ரூபா நிதியை வரவு செலவுத் திட்ட நிதியத்திலிருந்து விழிப்புலனற்றோர் நிதியத்திற்கு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒதுக்கியுள்ளார்.
மேற்படி நிதியானது விழிப்புலனற்றோருக்கான மருத்துவ உதவிகள் அவர்களது படைப்புக்களை வெளிக்கொண்டுவருதல், சுயதொழில் முயற்சிகள், கல்வி நடவடிக்கைகளுக்கõன நிவாரணங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகள் போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக சமூக சேவை. சமூக நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.
1993ஆம் வருடம் பாராளுமன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட விழிப்புலனற்றோர் நிதியத்திற்கு இதுகாலவரையில் எந்தவொரு அரசாங்கமும் இந்தளவு பாரியதொரு தொகையை ஒதுக்கவில்லை என்றும் இந்த நிதியத்திலிருந்து 2008ஆம் வருடம் முதல் உயர்கல்வி கற்கின்ற விழிப்புலனற்ற மாணவர்களுக்கு 1500 ரூபா மாதாந்த தொகையை வழங்கவும் அதேநேரம் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும், யுத்தம் காரணமாக பார்வை இழந்தோருக்கும், உதவுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் விழிப்புலனற்றோர் நிதியம் தெரிவித்துள்ளது.