ஊடகவியலாளர் எம்.பரமேஸ்வரியின் வீடு ஒரு குழுவினரால் நேற்று இரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பளை பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு நேற்று இரவு 9.00 மணியளவில் வந்த குழுவினர் வீட்டின் முன்புற ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தி விட்டு முன்னறையில் இருந்த சில பொருட்கøளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், வீட்டில் இருந்த பரமேஸ்வரியின் பெற்றோரையும் தாக்க முற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அயல் வீட்டு காரருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறை அடுத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். ஊடகவியலாளரான பரமேஸ்வரி பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.