2007 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக்கும் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டவேளையிலேயே அமெரிக்க அரசின் அறிக்கை சரியானது என்ற கருத்தை அவர் நியாயப்படுத்தி உள்ளார்.
196 நாடுகளில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க காங்கிரஸினால் அங்கிகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை சரியானதும் , நியாயமானதும் நன் நோக்கம் கொண்டதுமாகும் , நாங்கள் தவறுகள் இழைத்திருந்தால் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அவை குறித்து தங்களுக்கு தெரியப்படுத்துவதை வரவேற்பதாகவும் இலங்கையில் நாளாந்தம் பொதுமக்கள் எதிர் நோக்கும் வன்முறைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் இலங்கை அரசுடன் விரிவான பேச்சுக்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர் நேற்றை கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிடம் தெரிவித்துள்ளதாக தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.