News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

பொன். கணேசமூர்த்திக்கு "மாமனிதர்" விருது

15-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, "இலங்கை மண்" வானொலி நாடக ஆசிரியரான படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்திக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன், "மாமனிதர்" விருது வழங்கி மதிப்பளித்துள்ளார்.
பொன். கணேசமூர்த்திக்கு "மாமானிதர்" விருது வழங்கி தமிழீழத் தேசியத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
மக்களின் விடுதலை என்ற ஒரு மகத்தான இலட்சியத்தை வரித்து, அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய அயராது போராடி, அந்த இலட்சியப் போரில் தன்னையே அர்ப்பணித்த ஒரு உயர்ந்த மனிதர் இன்று எம்முடன் இல்லை.
 
இந்த உன்னதமான மனிதரை பகைவன் பலிகொண்ட செய்தி எமக்கு மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது.
 
திரு. பொன். கணேசமூர்த்தி அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அபூர்வமான குணவியல்புகள் கொண்டவர்.
 
நெஞ்சத்திலே நேர்மையும் உள்ளத்திலே உயர்ந்த எண்ணமும் கொண்டவர்.
 
அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொள்வார். 
 
நகைச்சுவை நடனமாடும் அவரது நாவும் கேட்பதற்கு இனிமையான அவரது கேளிக்கைப் பேச்சும் அனைவரையும் கவர்வன.
 
பொதுவாகவே, உயரிய கலைப்படைப்புக்கள் எப்போதுமே இரு முகங்களைத் தன்னகத்தே கொண்டது.
 
தாம் தோன்றிய சமகாலத்தை நோக்கியதாக ஒரு முகமும் எல்லையற்று வியாபித்து நிற்கின்ற எதிர்காலத்தை நோக்கிய இன்னொரு முகமாக எக்காலத்திற்கும் பொருந்தும் உயரிய தன்மை கொண்டது.
 
இத்தகைய காலத்தில் சாகாத கலைப்படைப்புக்களைப் படைத்து, எமது மக்களது மனங்களைத் தொட்டுச் சென்றவர் இவர்.  கவிஞராக, சிந்தனையாளராக, வரலாற்று அறிஞராக, மேடைப் பேச்சாளராக, பாடகராக, பல்துறை விற்பன்னராக அறிமுகமாகிக் கடந்த நாற்பது ஆண்டுகளில் அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.
 
இவர் தமிழீழ மண் மீதும் மக்கள் மீதும் அளவில்லாத அன்பும் பாசமும் கொண்டவர். 
 
தமிழீழ மண் விடுதலை பெற்று ஒரு சுதந்திர தேசமாக மலர வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். 
 
இந்த அபிலாசைக்காக தனது அறிவாற்றலாலும் செயலாற்றலாலும் அயராது உழைத்தார். 
 
தனது ஆழ்மனதில் எரிமலையாகக் குமுறிய விடுதலை வேட்கையை உணர்வின் வரிகளாக வடித்து, எம்மக்களது மனங்களிலே விடுதலைத்தீயை மூட்டினார்.
 
இருண்ட காலத்து இதிகாசங்களின் தாலாட்டுப்பாடல்களில் தூங்கிக்கிடந்த எம்மக்களைத் தட்டியெழுப்பி, விடுதலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சாதி, சீதனம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றிற்கு காப்பரணாக நின்று அநீதியில் அமைந்த பழைய சமூக உறவுகளைத் தகர்த்தெறிந்து, புதிய சமூக உறவுகளைக் கட்டியெழுப்ப, புதிய புரட்சிகரமான கருத்துக்களை மக்களது மனதைப் பற்றிக்கொள்ளும் விதத்தில் முன்வைத்தார். சீதன முறைமை என்பது ஒரு பெண் அடக்குமுறை வடிவம் என்பதை அறிவுசார் உலகத்தில் இருந்து சமூகவியல் கண்ணோட்டத்துடன் எடுத்து விளக்கி, பெண் விடுதலைக்குப் போராடினார். சாதாரண மனிதனின் சாதாரணமான சமூகப் பிரச்சனைகளைக்கூட சாதாரண மனிதன் புரிந்துகொள்ளும் வகையில் சாதாரண மொழியில் எடுத்து விளக்கி சமூக விடுதலைக்காகப் போராடினார்.
 
தொண்ணூறுகளில் இவர் எழுதிய வானொலி நாடகமாக ஒலிபரப்பாகிய இராவணனை கதாநாயகனாகக் கொண்ட "இலங்கை மண்" எனும் கலைப்படைப்பை எவருமே மறந்துவிட முடியாது. 
 
தமிழ் மன்னன் ஒருவன் ஆக்கிரமிப்பு மனோபாவம் ஒன்றுக்குப் பலியாக்கி அதில் உண்மைகளை திரிவுபடுத்தி பொய்மைகளை புனைவுபடுத்தி தமது இலக்கியக் கதையாடலுக்கான சுவையூட்டியாகச் சேர்த்துக் கொண்டவர்களின் முகத்திரையைக் கிழித்து உண்மையை அனைவருக்கும் உணரச் செய்தது இவருடைய படைப்பாகும். அத்தகைய காலத்தை மிஞ்சிய தமிழ் வரலாற்றை கலைநுகர்வாளர்களின் கண்முன் கொணர்வித்து நிறுத்தியது தமிழின் வாழ்வு மீது இவர் கொண்ட பற்றுதலுக்கு நற்சான்றாகும்.
 
திரு.பொன். கணேசமூர்த்தி அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று ஆகியவற்றுக்கு மதிப்பளித்தும் எமது தேச வளர்ச்சிக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பைக் கௌரவித்தும் “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.
 
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று தமிழீழத் தேசியத்தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் பொன். கணேசமூர்த்தி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
 
 Other Articles
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
•  11 May 2008 00:48:00 ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன
•  10 May 2008 15:54:00 கலவரக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்ட அமைச்சர் பாயிஸ் இல்லம்
•  10 May 2008 15:19:00 மோசடிகளுக்கு மத்தியிலும் 60 சதவிகித வாக்குகள் பதிவாகின
•  10 May 2008 15:11:00 தேர்தல் முடிவடைந்தது - முடிவுகள் நள்ளிரவுக்குப் பின்
•  10 May 2008 15:03:00 புலிகளின் பகுதியில் விமானத் தாக்குதல்
•  10 May 2008 14:48:00 "நீதியை நிலை நாட்டத் தவறிய பிரித்தானியா" - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்ட
•  10 May 2008 13:28:00 ஆணையாளரின் உத்தரவுகள் கிழக்கில் அமுல்படுத்தப்படவில்லை
•  10 May 2008 13:22:00 முஸ்லிம் வாக்களார்கள் மிரட்டப்பட்டுள்ளனர்
•  10 May 2008 13:20:00 அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலின் விளிம்பில்
•  10 May 2008 13:13:00 வன்முறைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்
•  10 May 2008 12:59:00 அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற நிலையில் அல்லைப்பிட்டி மக்கள்
•  10 May 2008 10:07:00 அம்பாறையில் புலிகள் மோட்டார்த் தாக்குதல்கள்
•  10 May 2008 10:03:00 மோசடியில் ஈடுபட முயற்சித்த அமைச்சரின் புதல்வர் உள்ளிட்ட அரசாங்க ஆதரவாளர்கள் கைது
•  10 May 2008 10:01:00 கண்காணிப்பாளர் செல்ல அனுமதி மறுப்பு
•  10 May 2008 09:58:00 மாவிலாறுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பிள்ளையான் குழு மோதல்
•  10 May 2008 09:54:00 செஞ்சிலுவைச் சங்கத்திடம் படையினரின் 5 உடலங்கள் கையளிப்பு
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions