அனுராதபுரம் மலவத்து ஓயா காட்டுப்பகுதியில் இருந்து இன்று சனிக்கிழமை காலை பெண்னொருவரின் சடலத்தை அனுராதபுரம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை மீட்க்கப்பட்ட இச்சடலம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்னொருவரின் சடலமென அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் இதுவரை அடையாளங்காணப்படவில்லையென தெரிவித்த பொலிஸார் , அடையாளங்காணும் பொருட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.