நெதர்லாந்து தமிழர் ஒன்றியத்தால் சிவனேசன் படுகொலையைக்கண்டித்து நெதர்லாந்தின் வெளிநாட்டமைச்சிற்கு அனுப்பப்பட்ட கண்டனக்கடிதத்திற்கு நெதர்லாந்து அரசானது பதிலை அனுப்பியுள்ளது.
அதில், 07-03-2008 அன்று வெளிநாட்டு அமைச்சிற்கும் அபிவிருத்தி அமைச்சிற்கும் அனுப்பிய உங்கள்கடிதம் கிடைத்தது. நன்றி. நாங்கள் இலங்கையில் நடைபெறும் பலாத்காரமான தாக்குதல்களையும் சிவனேசன் மீது நடாத்தப்பட்ட தாக்குதலையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
உள்நாட்டு பிரச்சனைக்கு ஆயுதத்தீர்வு முடிவல்ல. நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஏனைய சர்வதேசநாடுகளான நோர்வே, அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகள் பேச்சுவார்ததை மூலம் எல்லோராலும் எற்கக்கூடிய தீர்வை காணுமாறு அழுத்தத்தை கொடுத்து வந்தோம்.
இருபக்கமும் அரசியல்தீர்விற்கு வராதபடிhல் சர்வதேசம் சரியானமுறையில் வேலைசெய்யமுடியவில்லை . நெதர்லாந்து அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் முயற்சி செய்து வருகின்றார்கள்.
இம்மாதம் 17,18 ம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு செல்வதற்கிருக்கின்றார்கள். அவர்கள் இலங்கை அரசிற்கு அரசியல்தீர்வைக்காணுமாறு அழுத்தம் கொடுப்பதோடு மனிதாபிமான நிலமைகள், மனித உரிமை மீறல்கள் பற்றியும் இலங்கை அரசுடன் பேச்சுவார்தை நடாத்துவார்கள். நெதாலாந்து அரசானது ஐரோப்பிய ஓன்றியத்தினூடாகவும் ஐ.நா சபை மூலமும் இலங்கையில் மனிதாபிமான நிலமைகள், மனிதஉரிமைகளை பேணுவதற்காக சகல செயற்பாடுகளையும் முன்னெடுக்கும்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.