மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இன்றும் 06 வது நாளாகவும் கடும் மழை செய்து வருகிறது.இதனால் மன்னார் நகரப்பகுதிகளில் பாரிய வெள்ளம் உருவாகியுள்ளது.மன்னார் நகரப்பகுதியின் முக்கிய பிரதான வீதிகள் சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் வீதிகளினூடாக வரும் கழிவு நீர் அருகிலுள்ள தாழ்வான வீடுகளுக்குள் தேங்கி நிற்கிறது.இதே வேளை மன்னார் மூர் வீதியில் உள்ள மன்/அல்-அஸ்ஹர் ம.வி பாடசாலைக்கு அருகாமையில் கடந்த 04 வாரங்களுக்கு முன் அந்த வீதியில் 05 இற்கும் மேற்பட்ட குவியல் மண் நிரப்பபட்டுள்ளது.
ஆனால் இதுவரை அவை சமப்படுத்தவில்லை இதனால் அவ்விதியினால் அருகாமையிலுள்ள குளத்திற்கு செல்லும் மழை நீர் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள்ளும் வீதிகளிலும் தேங்கி நிற்கிறது.
அதனால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் உட்பட்ட அணைவரும் பெரும் இன்னல்களை அடைந்து வருகின்றனர்.இதனால் இப்பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் அஞ்சுகின்றனர்.மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.