இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முனதினம் வெள்ளிக்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்து களமுனைத்
தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
வவுனியாவிலுள்ள வன்னிக்கான இராணுவக் கட்டளைத் தலைமையகத்திற்குச் சென்ற இராணுவத் தளபதி அங்கு நடைபெற்ற சந்திப்பில் வன்னிக்கான படையணித்தளபதிகள் மற்றும் கட்டளைத் தளபதிகள் கலந்து கொண்டு களமுனை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இந்தச் சந்திப்பில் மன்னார் மற்றும் மணலாறு படையணிகளின் தளபதிகளும் கலந்து கொண்டு போர்க்கள நிலைமைகள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது வன்னியில் இடம்பெறும் படை நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து வீடியோ படவிளக்கங்களும் அளிக்கப்பட்டன.
இராணுவத் தளபதியுடன் இந்த விஜயத்தின் போது கொழும்பிலிருந்து சிரேஷ்ட படை அதிகாரிகளும் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.