சிறிலங்கா படையினரின் 58 ஆவது படையணி அடம்பனை நோக்கியும் 57 ஆவது படையணி மடுவை நோக்கி 3 முனைகளாலும் நகர்ந்து வருவதா கப் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. இந்தப் படை நடவடிக்கையானது ஏ9 வீதிக்குப் பதிலாக ஏ32 வீதியைக் கைப் பற்றும் படையினரின் உத்தியைக் காட்டுகின்றது.
இவ்வாறு கொழும்பிலிருந்து வெளி வரும் "லக்பிம' வார ஏட்டின் நேற் றைய பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:
கடந்த வாரம் ஏ9 வீதியில் உள்ள புளியங்குளம் பிரதேசத்தைப் படை யினர் கைப்பற்றிவிட்டதாகச் சிறிலங் காவின் தென்பகுதியில் தகவல்கள் பரவியிருந்தன. ஆனால் அதில் உண் மையில்லை என்பது பின்னர் தெரிய வந்தது. மன்னார் பகுதியில் உள்ள புளியங்குளத்தையே படையினர் கைப் பற்றியிருந்தனர்.
ஆனால், வன்னியில் மிக நெருக்க மான சமர்கள் நடைபெறவில்லை எனவும், விடுதலைப் புலிகள் நேரடி யற்ற சூடுகளையே பயன்படுத்தி வருகின்றனர். பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளையும் அவர்கள் பயன் படுத்தி வருகின்றனர். இவையே படை யினருக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
அடம்பன் பகுதிக்கான கட்டளைத் தளபதியாக லக்ஸ்மன் விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டுள்ளார். அடம்பனைத் தொடர்ந்து படையின ரின் இலக்கு விடத்தல்தீவாகும். இது விடுதலைப் புலிகளின் விநியோக வழிகளைத் தடுக்கும் நடவடிக்கையா கும்.
இந்தப் பகுதியில் உள்ள ஆழமற்ற கடற்பிரதேசம் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்குச் சாதகமானது. அங்கு கடற்படையினரின் டோரா வகை தாக்குதல் படகுகள் நடவடிக் கையில் ஈடுபடுவது கடினமாகும். எனவே கடற்படையினர் நீருந்து விசைப் படகுகளையே அப்பகுதிகளில் பயன் படுத்தி வருகின்றனர்.
இந்தப் பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்களில் கடந்த வாரம் 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 60 படையினர் காயமடைந்துள்ளதா கவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் உண்மையான இழப்புகளை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.