இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆரய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை அமைக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் யோசனை அனைத்துலகை ஏமாற்றும் முயற்ச்சி என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனேத கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் ஆராய்வதற்கென அமைக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு இலங்கையில் இருந்து வெளியேறியதை அடுத்து அனைத்துலகை திருப்பதிப்படுத்துவதற் குஸ்ரீலங்கா அரசாங்கம் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது ஆதில் ஒரு அம்சமாக மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிஜல் ஆராயும் புதிய குழு ஒன்றை அமைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் யோசனை வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள இந்த யோசனைகளை வெறும் கணதுடைப்பு முயற்ச்சியே என்றும் இந்த குழுக்களர் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவே அல்லது ஈடுபடும் நபர்களை அடையானம் கண்டு சட்டத்தின் முன்நிறுத்தவோ முடியாது என்றும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளளார்.