கடந்த வாரம் இலங்கை இராணுவத் தின் காலாட்படையணி ஒன்று முகமாலைக்கு தெற்கே புலிகளின் பகுதிக்குள் டாங்கிகள், கவசவாகனங்களின் ஆதரவுடன் நடவடிக்கையொன்றை ஆரம்பித்தது.
அங்கு அவர்கள் வெகுநேரம் சுமார் மூன்று மணி நேரம் தரித்து நின்றனர். கெரில்லாக்கள் பின்நோக்கி நகர்ந்திருக்கலாம் என்று நினைப்பதாக இளம் இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இது உறுதிப் படுத்தப்படவில்லை. இராணுவம் மேலும் உள்ளே வரட்டும் என்று புலிகள் காத்திருந்தார்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும் படையினர் பின்னர் தமது பழைய நிலைகளுக்குத் திரும்பிவிட்டனர். இப்பகுதி களநிலை மிகவும் பதற்றமாகவே இருந்தது. கடந்த நவம்பர் 19ஆம் திகதி இப்பகுதியில் கடைசியாக பெரும் போர் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது. பெண் போராளிகளின் கடும் எதிர்ப்பு மன்னார் களமுனைகளில் பெண் போராளிகளின் எதிர்ப்புக்களைத் தாம் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருவதாக உயர் இராணுவ அதிகாரிகள் சிலர் கூறினார்கள். சில உடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் மூலம் ஒப்படைக்கப்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர்.
பூதவராயன் குளத்திற்கு மேற்கில் நட வடிக்கையில் ஈடுபட்ட படைகள் இப்பொழுது மடு தேவாலயத்திற்கு சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தூரத்திலிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.கத்தோலிக்க மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயத்தையும் அதனைச் சுற்றிலுமுள்ள பிரதேசங்களைக் கைப்பற்றுவதே படைகளின் இப்போதைய பிரதான நோக்கம். புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல் காரணமாக இந்த நடவடிக்கைக்கான இறுதிக்காலக்கெடுவை அவர்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் எந்நேரத்திலும் தங்களால் முறியடித்துவிட முடியும் என்கிறார்கள் அவர்கள் சொந்தம் பாராட்டாதபகுதியைக் கைப்பற்றினர் வெலிஓயா களமுனையில் முல்லைத் தீவை நோக்கி படையினர் முன்னேறி வரு கின்றார்கள். அவர்களின் முன்னேற்றப் பாதையில் காணப்படும் பகுதிகளை யாரும் சொந்தம் கொண்டாடாத பகுதிகளில் பெரும் நிலப்பகுதிகளை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இப்பகுதியை அடுத்து புலிகளின் மிகக் கடுமையான தற்காப்புப் பகுதியான அடர்ந்த காட்டுப் பிரதேமுள்ளது. முல்லைத்தீவுப் பகுதிக்கு இங்கிருந்தே அவர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றார்கள்.
துருப்புக்களின் முன்னநகர்வு எதிர்ப் பில்லாமல் நடக்கவில்லை. பெரும்பாலும் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களே இங்கு கூடுதலாக இடம்பெற்றுள்ளன. இப்பகுதியிலும் பெண் போராளிகளின் எதிர்த்தாக்குதல்களை இராணுவம் எதிர்கொண்டது. வெள்ளவத்தைக் குண்டுவெடிப்பு இதேவேளை, முறையாகத் தயாரிக்கப்படாத வெடிபொருள் ஒன்று வெள்ள வத்தையில் கடந்த திங்கட்கிழமை வெடித்துள்ளது. இதில் பிச்சைக்காரர் ஒருவர் மரணமானார். றொக்ஸி சினிமா தியேட்டருக்கு அருகில் கடதாசியில் சுற்றிக்கிடந்த பார்சலை புரட்டிப்பார்த்தபோது அது வெடித்துள்ளது. மூன்று பாடசாலை மாண வர்களும் இதில் காயமுற்றார்கள்.
வந்தார் பிரபாகரன்
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் அல்லது காயமுற்றுவிட்டார். அவரது கால் துண்டிக்கப் பட்டுவிட்டது என்றெல்லாம் வெளிவந்திருந்த செய்திகளைப் பொய்ப்பிக்கும் வகையில் அவர் காலஞ்சென்ற சிவனேசன் எம்.பியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட படத்தினை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளார்கள். பிரபாகரனை நேரடியாக பலர் பார்த்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர்கள் 13 பேரும் அதில் அடங்குவர். காலஞ்சென்ற சிவனேசனின் உடல் கிளிநொச்சியிலிருந்து மல்லாவியிலுள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கிருந்து புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு உட்பட கிராமம் கிராமமாக மக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள கலா சார மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இரவு 8.30 மணியளவில் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டது. அதேசமயம் அமரர் சிவனேசனின் குடும்பத்தினர் மனைவி, நான்கு பிள்ளைகள் மற் றும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்கு வெளியில் உள்ள ஓர் இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் ஒரு கட்டடத்திற் குக் கூட்டிச்செல்லப்பட்டனர். இரவு 10.30 மணியளவில் பெரும் இரைச்சலுடன் வாகனம் ஒன்று வந்த சத்தம் கேட்டது. சில நிமி டங்களில் ஆயுதம் தரித்த சிலர் அங்கு வந் னர். பின்னர் முதலில் புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான் உள்ளே நுழைந்தார். அவரைத் தொடர்ந்து அரசியல்துறைத் தலைவர் நடேசன் வந்தார். அதன் பின்னர் நிதித் துறைப் பொறுப்பாளர் தமிழேந்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் வந்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களில் ஒருவர் கூறினார் "எனது கண்கள் உடனடியாக அவருடைய கால்களைத்தான் பார்த்தன. காயமடைந்துள்ளனவா, அல்லது பொய்க்காலுடன் வந்தாரா என்பதைக் கண்டறிய ஆனால் அவர் இயல்பாக நடந்துவந்தார்'' என்று.
குத்துவிளக்கைக் கொளுத்திவிட்டு அமரர் சிவனேசனின் பூதவுடலுக்கு மாலை அணிவித்து கைகளைக் கூப்பி அஞ்சலி செலுத்தினார். பின்னர் திருமதி சிவனேசனுடனும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பி னர்களோடும் உரையாடினார். புதிதாக நியமனம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது இமாமுடனும் அளவளாவினார்.
யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராக அடுத்து நியமனம் பெறப்போகும் சொலமன் எஸ்.சிறில் ஆவார். இவர் தொழில் முறையில் கூட்டுறவுப் பரிசோதகராவார். கடும் சோதனைக்கு ஆளாக்கப்பட்ட எம்.பிக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்துறைப் பொறுப்பாளருடன் கிளிநொச்சியில் திங்கட்கிழமை கலந்துரையாடல்களை நடத்தியதன் பின்னர் செல்வாய்க்கிழமை அன்று கொழும்பு திரும்பினார்கள். வரும் வழியில் மதவாச்சி சோதனைச் சாவடியில் அவர்கள் மூன்று மணிநேரம் கடுமையாக சோதனைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களின் வாகனம் முழுமையாகச் சோதிக்கப்பட்டது. அந்த சோதனைச் சாவடிகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மிக கண்ணியமாக நடந்துகொண்டனர். மேலிடத்திலிருந்து தமக்கிடப்பட்டிருந்த கட்டளைகளை அவர்கள் நிறைவேற்றினார்கள்.'' என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.