நகரத்தின் வர்த்தக நிலையங்களில் நாட்டரிசியின் விலை "நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக' உயர்ந்து வருகின்றது.
நேற்றைய தினம் ஒருகிலோ நாட்டரிசி ரூபா 75 இற்கு விற்பனையானது. நேற்று முன்தினம் சனிக்கிழமை கிலோ 65 ரூபா கவும் கடந்த புதன்கிழமை கிலோ 60 ரூபா ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
மழையினால் அரிசி விலை உயர்வதாக வர்தகர்கள் தெரிவித்தனர். இம்முறை குடாநாட்டில் நெல் உற்பத்தி கணிசமான அளவு அதிகரித்திருந்த தாக தகவல்கள் வெளியான நிலையில் அரிசியின் விலையை தினமும் அதிகரிப்பது குறித்து பாவனையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.