ரூபாவாகினி வட்டார தகவல்களின் அடிப்படையில் இன்று ரூபாவாகினி ஊழியர்களுடன் அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் சிறீலங்கா ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.
ரூபவாகினியின் துணை அதிபர் அவர்களை காடையர்குழு தாக்கியதையடுத்து நேரடி ஒளிபரப்புகளை இடைநிறுத்தி தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குமாறு கோரிக்கையினை முன்வைத்து போராட்டங்களை ரூபாவாகினி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவர்களது போராட்டத்திற்கு தகுந்த பதில் கிடைக்காத பட்சத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில ஈடுபடுவதற்கு ஊழியர்கள் முற்பட்டபோதும் இன்று சிறீலங்கா ஜனாதிபதி அவர்கள் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் இவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.