சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்த போலி அரசசார்பற்ற நிறுவன ஊழியர் ஒருவர் ஒருவர் பெண் பொலிஸாரால் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர் பல சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளோடு தொடர்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தற்போது குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் . சந்தேக நபர் மீது நிறுவன செயற்பாடுகளின் போது பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்பு பட்டுள்ளதாகவும் பொது மக்களிடம் இருந்து ஏற்கனவே ஏராளமான நிதியை சூறையாடி இருப்பதாகவும் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்குள் தெரியப்படுத்துகின்றன.