பாராளுமன்றத்தில் இன்று மறைந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவரும் முன்னாள் சபா நாயகரும் அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அனுர பண்டாரநாயக்கவின் பூத உடலுக்கு பாராளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது .
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , சபாநாயகர் டபிள்யு ஜெ.எம். லொக்குபண்டார ஆகியோரும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சல் நிகழ்வில் பிரசன்னமாகி இருந்தனர்