ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரூபவாஹினி கூட்டுத்தாபன நிர்வாகத்தினால் கட்டாய லீவில் அனுப்பப்பட்டதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
583ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள்களுக்கு இந்த கட்டாய லீவு வழங்கப்பட்டுள்ளது.
117 ஊழியர்களே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உள் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் ஏனையவர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக ஊழியர்கள் குழுமி நின்று அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வா இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் புகுந்து புரிந்த அட்டகாசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து ஊழியர்கள் தாக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கு முறையான விசாரணை நடத்தக்கோரியும் ரூபவாஹினி கூட்டுத்தாபன அனைத்து ஊழியர்சங்கத்தினால் பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளபடவிருந்தது.
இதற்கு முன்னதாகவே ரூபவாஹினி கூட்டுத்தாபன நிர்வாகத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு முன்பாக படையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் படையினர் பெயர் பட்டியல் ஒன்றுடன் நின்று சிலரை உள்ளீர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஏனை செயற்பாடுகளுக்கு படைப்பிரிவின் தொழி;ல்நுட்ப பிரிவு வரவழைக்கப்பட்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் ரூபவாஹினி கூட்டுத்தாபன நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.