மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பிரதேசத்தில் இருந்து வெல்லாவெளிக்கு வயல் வேலைகளுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை காணவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி நாதனைக்கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து பெரியகல்லாற்றில் வசித்துவந்த திலகரத்ன உதயகுமார் (30வயது) என்னும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல்போனதாக களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த 5ஆம் திகதி தனது வயலை பார்வையிட மோட்டார் சைக்கிளில் சென்றவர் வெல்லாவெளிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென காணாமல் போனவரின் மனைவி றஜனி களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.