மன்னார் மல்வத்து ஓயா முருங்கன் பகுதியில் இன்று காலை கிளேமோர்த்தாக்குதல் நடத்தப்பட்டது.
சிறிலங்காப் படையினரின் ரோந்துப் பிரிவினரை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் படைச்சிப்பாய் ஒருவர் சம்பவஇடத்திலே கொல்லப்பட்டார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மேலதிக பொலிசாரும் படையினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.