மன்னார் கொல்லிமோட்டைப்பகுதியில் இன்று காலை 7.10 மணியளவில் கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அரவியாறு பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட இராணுவத்திரை இலக்கு வைத்து இக்கிளேமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது.
இக்கிளேமோர் தாக்குதலின் போது இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மையம் மேலும் தெரிவித்துள்ளது.