மன்னார் தள்ளாடி மற்றும் உயிலங்குளம் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.
இம் மோதலின் போது படுகாயமைடைந்த 14 இராணுவத்தினர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
படுகாயமடைந்த 14 இராணுவத்தினரையும் மேலதிக சிகிச்சைகளிற்க்காக அனுராதப்புரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை மன்னார் தள்ளாடி மற்றும் சௌத் பார் படைத்தளத்திலிருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும், இதனை தொடர்ந்து மன்னாரின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்.