இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட தீர்மானித்துள்ளனர். பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் ஏற்கனவே தங்களது கோரிக்கைகளை கூட்டுத்தாபன நிர்வாகத்திடம் முன்வைத்திருந்தனர்.
இதுவரையில் அவர்களுடைய கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாததால் நாளை புதன்கிழமை பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.இது தொடர்பான இறுதி முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஊழியர்கள் நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.