கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை களை மே மாதத்தில் நடத்தி முடிக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலை யில், அண்மையில் நடந்து முடிந்த உள் ளூராட்சித் தேர்தல் வெறும் கேலிக் கூத்து என வர்ணிக்கப்படுகின்றது. அதேவேளை நாட்டில் சீர்கெட்டுவரும் மனித உரிமை நிலையைக் கவனத் தில் எடுத்து செயற்படுத்தும்படியாக சர்வதேச சமூகத்தினரின் கடுமை யான நெருக்குதல்களுக்குள்ளாகி வருகி றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
போர்க்கள நிலை இலகுவானதாக இல்லை
பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் அரச படைகள் தரப்பில் 900 பேர் இறந்து அல்லது காயமடைந்தள்ளார்கள் என் பது வன்னியில் நடக்கும் போரானது அவ்வளவு இலகுவானதாக இல்லை என்பதைக் காட்டுகிறது. அதேவேளை அரச படைகளால் விடுவிக்கப்பட் டுள்ள கிழக்கில், அரசினால் ஆதரவளிக் கப்பட்டுவரும் தமிழ் மக்கள் விடுத லைப் புலிகள் கட்சி உட்பட துணைப் படைக் குழுக்கள் அனைத்தும் ஆயு தங்களுடன் சுற்றித் திரிந்து வருகின் றன. அண்மையில் ஆழ ஊடுருவும் அரச படைகளின் குண்டுத்தாக்குத லில் மரணமான நாடாளுமன்ற உறுப் பினர் சிவநேசனின் இறுதிச் சடங்குக ளில் பங்குபற்ற கிளிநொச்சிக்குச் சென் றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய அரசியல் நிலைமை குறித்து த.ஈ.வி.புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனுடன் நடத்தி யுள்ள கலந்துரையாடலில் பல உருசிகர மான விடயங்கள் வெளிவந்துள்ளன.
பேச்சு நடப்பது அரசின் கையில்
அரசாங்கம் போரைத் தொடர்ந்து நடத்த விரும்பினால் அந்தச் சவாலை புலிகள் எதிர்கொள்ளத் தயாராய் உள் ளனர். பேச்சு நடத்த அரசு தயார் என் றால் அதற்கும் நாம் தயார். ஆனால் அது அரசின் கையில்தான் உள்ளது என்று நடேசன் நாடாளுமன்ற உறுப் பினர்களிடம் கூறியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து நாம் விலகிக்கொண்டுவிடவில்லை. அரசாங்கம்தான் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துள்ளது. முழு அளவிலான தீர்வு ஒன்றை நோக்கி பணியாற்றவும் நோர்வேயின் அனுசரணையை ஏற்றுக்கொள்ளவும் நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அதுவும் அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது என்றும் கூறியுள்ளார் நடேசன்.
பேச்சு நடத்த நாம் தயார். ஆனால் அதற்கான சுமுக சூழ்நிலை இருக்க வேண்டும். அதாவது மோதலை நிறுத்துவதற்கான ஒரு போர்நிறுத்தம் ஏற்படவேண்டும்
போர்நிறுத்தத்திற்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கும் இடையிலான நுண் ணிய வேறுபாட்டை விளக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அரசி யல் பொறுப்பாளர், போர்நிறுத்தம் இருந்தால் அரசுடன் பேச நாம் தயார். அந்தப் பேச்சின்போது போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்தோ அல்லது ஒரு புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்தோ நாம் பேசமுடியும் என்று கூறியுள் ளார்.
நடேசனின் இவ்விதமான கூற்று புலிகள் பலவீனமடைந்திருப்பதையே காட்டுகிறது என்று அனேகர் அவசரப் பட்டுத் தீர்மானித்துவிடக் கூடும். ஆனால், மனித உரிமை சீர்கேடு கார ணமாக அரசாங்கம் நெருக்குதலுக் குள்ளாகியுள்ள நிலையில் சர்வதேச நாடுகளைத் திருப்திசெய்யும் நோக் கத்தில் புலிகள் இவ்வாறு அறிவித் தல்களை வெளியிடக்கூடும். இந்த அடிப்படையில்தான் புலிகள் தற்காப்பு யுத்தம் ஒன்றையே நடத்திவருவதா கவும் பேச்சுக்குத் தயாராய் இருப்ப தாகவும் காட்டிக்கொள்கின்றார்கள்.
களநிலை பற்றிய கவலை வேண்டாம்
இந்தக் கலந்துரையாடல்களின் போது, போர் தொடருமானால் கள நிலைமைகள் என்னவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடேச னிடம் கேட்டிருக்கிறார்கள்.
போரைப் பற்றிக் கவலைப்படா தீர்கள். களநிலைமைகள் குறித்து நாம் மிக உறுதியோடுதான் இருக்கிறோம் என்று அவர் பதில் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் 20 அல்லது 30 புலிகள் கொல்லப்படுவதாக இலங்கை அரசு கதைகளைக் கூறிவருகின்றது. இவைகளை மறுத்துக்கொண்டிருக்க நாம் விரும்பவில்லை. ஏனென்றால் மக்கள் உண்மையை உணரும்போது அரசுக்கு எதிராக தாங்களாகவே மாறி விடுவார்கள். வன்னிக்குள் அரச படை கள் வருவதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. அரச படைகளை நெற் றிக்கு நேர் சந்திக்க நாம் தயாராய் இருக் கின்றோம் என்றும் அரசியல் பொறுப் பாளர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் வலிந்து தாக்கவில்லை நாம் இன்னமும் வலிந்து தாக்கு தல்களில் இறங்கவில்லை. ஏனென் றால் அரசாங்கத்தின் போர் நடவடிக் கைகளுக்கு அனைத்துலக நாடுகள் எவ்வாறு பிரதிபலிக்கப் போகின்றன என்பதைக் கண்டறிய நாம் விரும்பு கின்றோம் என்று கூறியுள்ளார் நடேசன்.
பார்க்கப்போனால் அரசாங்கத்தை அனைத்துலக சமூகத்தின் முன்னால் மூன்று முனைகளில் நெருக்குவதற் குப் புலிகள் முயல்வது தெரிகிறது. மனித உரிமை மீறல்கள், போர்நிறுத்த ஒப்பந்த நிராகரிப்பு, தற்காப்பு நட வடிக்கைகளுக்கெதிரான அரசாங்கத் தின் வலிந்த தாக்குதல்கள் ஆகிய வையாகும்.
எப்படி எதிர்கொள்வது என்பதைத் தீர்மானிப்போம்
அரசாங்கத்தின் இராணுவத் தாக்கு தல்களைத் தொடர்வதை அனைத்து லக சமூகம் ஏற்றுக்கொள்ளுமானால், அப்படியான நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்பதைப் புலிகள் தீர்மானிப்பார்கள் என்றும் நடேசன் தெரிவித்துள்ளார்.
புலிகள் தமது அடுத்த நடவடிக்கை பற்றித் தீர்மானிப்பதற்கு முன்பாக அனைத்துலக நாடுகள் தற்போதைய நிலைமையை எவ்வாறு எதிர்கொள் கின்றன என்பதை காத்திருந்து பார்க் கப்போகிறார்கள் என்பதையே நடே சனின் இந்தக் கருத்துக்கள் வெளிப் படுத்துகின்றன.