சிகரட் வகைகளின் சில்லறை விலைகளை 01 ரூபாவினால் சிலோன் டுபாக்கோ கம்பனி அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டுபாக்கோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோல்ட் லீப், போல்ட்மோல், டன்ஹில், திரிரோசஸஸ், பென்சன், ஆகியவற்றின் விலைகள் 01 ரூபாவினாலும் போர்எஸ்சேஸ் சிகரட்டின் விலை 1 ரூபா 50 சதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோல்ட்லீப் சிகரட் ஒன்றின் விலை 15 ரூபாவாக அதிகரித்துள்ளது.