மன்னார் பாலைக்குழிக்கு அண்மையில் உள்ள களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
பாலைக்குழிப் பகுதியில் கடந்த 10 ஆம் நாள் இடம்பெற்ற பெரும் மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டு 14 படையினர் காயமடைந்ததாகவும் இதில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கப்டன் நிலை அதிகாரி என்றும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கெமுனுவோச் படைப் பிரிவைச் சேர்ந்த கப்டன் உடுவத்த என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.