கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பினை நோக்கி இன்று முற்பகல் கிளாலி சிறிலங்காப் படைத்தளத்தில் இருந்து படையினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பூநகரி மக்கள் குடியிருப்பு நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் படையினர் எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தினர்.
இதில் இரண்டு எறிகணைகள் ஒரே இடத்தில் வீழ்ந்து வெடித்தில் ஒரு பிள்ளையின் தந்தையான மகாலிங்கம் சசிக்குமார் (வயது 24) அந்த இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினார்.
அதேவேளை, செல்வபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு அருகாமையிலும் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதில் மாணவரான செல்வராசா தர்சன் (வயது 16) என்பவர் படுகாயமடைந்தார். இவர் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.