கொழும்பு பேலியகொடயில் ரயில் வீதிக்கு மேலாக 300 மீட்டர் நீளமான மேம்பாலம் ஒன்றை 61 நாட்களில் நிர்மாணித்தன் மூலம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் அரசாங்கமே நிகழ்த்தியிருந்தது.
பிலிப்பைன்ஸின் மணிலா நகரத்தி;ல் சுமார் 300 மீட்டர் நீளமான மேம்பாலத்தை அந்நாட்டு அரசாங்கம் 66 நாட்களில் நிர்மாணித்தது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் களனி ரயில் கடவையை ஊடறுத்துச் செல்லும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் ஐக்கிய இராச்சியத்தின் 2000 மில்லியன் ரூபாய் உதவியில் அமைக்கப்பட்டுள்ளது.
களனி ரயில் கடவையினூடாக ஒரு நாளைக்கு சுமார் 75 ஆயிரம் வாகனங்கள் பிரயாணம் செய்கின்றன. ரயில் வண்டிகள் செல்வதற்காக 160 தடவைகள் இக்கடவை மூடப்படுகின்றது. இந்த மேம்பாலம் அமக்கப்படுவதன் மூலம் அந்த வீதியில் தினமும் ஏற்படும் வாகன நெரிசல்களை வெகுவாகக் குறைந்து விடும் ; என்றும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.