யாழ்.மாவட்டத்தில் கணித பாடப் பெறுபேறுகள் பெரிதும் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இது எதிர்காலத்தில் பெரும் பின்னடை வையே ஏற்படுத்தும். இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை.
நல்லூர் சயன்ஸ் அக்கடமியில் ஆங் கிலமொழி மூல கற்கைநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
அறிவியல் தொழில்நுட்ப யுகத்திலே வாழுகின்ற நாம் உலகியல் மாற்றத்துக் கேற்ப எம்மையும் வளப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அவ தானித்துப் பார்த்தால் ஒப்பீட்டு ரீதியில் கணிதபாடப் பெறுபேறுகள் பாரிய வீழ்ச்சி யடைந்திருப்பதைக் காணமுடிகிறது.
இந்நிலையிலிருந்து எமது மாணவர் களைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியரையும் சார்ந்ததாகும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடை யத் தவறியதும் பிள்ளையின் எதிர்காலமும் தனது கௌரவமும் பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள். இது தவறானது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திய டையாத மாணவர்கள் பலர் சாதாரண தரத்தி லும் உயர்தரத்திலும் சாதித்திருக்கிறார்கள். மாறாக தற்போது புலமைப் பரிசில் பரீட் சையில் சித்தியடைந்த மாணவர்கள் உயர் கல்வி கற்கத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.
மாணவர்கள் அனைவரும் ஆங்கில மொழியில் தேர்ச்சிடையவேண்டிய அதே நேரம் கணிதம், தமிழ்மொழி ஆகியவற்றில் பாண்டியத்துடன் இருப்பதும் அவசியமாகும்.
கல்வி வளர்ச்சிக்குப் பெரும் தடையாக அமையும்
சாதாரண தர கணிதபாட பெறுபேறுகள் பெரிதும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. பல பாடசாலைகளில் ஏனைய பாடங் களில் விசேட சித்திபெறும் மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி பெறத் தவறி வருகிறார்கள்.
இது எதிர்காலக் கல்விச் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெருந் தடையாக அமையும். இந்த நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கணிதபாட ஆசிரியரின் கைகளி லேயே உள்ளது.
கணித பாடத்தைப் போதிக்கும் ஆசிரியர் கள் கற்பித்துத் தெளிவுபடுத்தியபின் கணக் குகளை கரும்பலகையில் செய்து காட்டுவ தால் இந்நிலை மாறப்போவதில்லை. அப்பி யாசக் கொப்பிகளில் ஒவ்வொரு மாணவ ரையும் சுயமாகச் செய்யவைக்கவேண் டும். பின்நிலையிலுள்ள மாணவர்களுக்கு கீழ் வகுப்புக்குரிய கணக்குகளிலிருந்து முறையாக வழிநடத்தினால் அவர்கள் படிப்படியாக உரிய அடைவுமட்டத்தை எட்டிவிடுவார்கள்.
பல்கலைக் கழகத்திலே புதிய பல பாடத் துறைகள் அறிமுகம் செய்யப்பட் டுள்ளன. உலக மாற்றத்துக்கேற்ப புதிய பல பாடத்துறைகள் எதிர்காலத்தில் ஆரம் பிக்கப்படும். எனவே மாணவர்கள் தமது திறமைக்கேற்ப விரும்பிய பட்டத்தைப் பெறலாம்.
இன்றைய சூழலில் பட்டம் பெற்றவர் கள் தாராளமாக இருக்கிறார்கள். இரண்டாம் பட்டம் பெற்றால்தான் இன்றைய சமூகம் எம்மை மதிக்கும் நிலை வந்துவிட்டது. மாணவர்களைப் பெற்றோரும் ஆசிரியர் களும் இணைந்து இந்நிலைக்குக் கொண்டு வந்து விடவேண்டும் என்றார்.