மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அனுர பண்டாரநாயக்காவின் பூதவுடல் கொரகொல்லையிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.தற்போது உறுதி கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பி.பகல் 2.30 மணி அளவில் கொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அன்னாரது பூதவுடல் தாங்கிய பேளை எடுத்து செல்லப்படவுள்ளது.நிட்டம்புவ வரை பேளை தாங்கிய ஊர்தி பயணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என போக்குவரத்த்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தற்போது அன்னாரது இல்லத்தில் வைக்கப்ப்பட்டுள்ள பூதவுடலிற்கு முக்கியஸ்த்தர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.