மற்றும் ஒரு வரவுசெலவுத்திட்ட யோசனையை அரசாங்கம் சமர்பிக்கக்கூடிய நிலையில் இல்லை என ஜே வி பி தெரிவித்துள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க நேற்று மாத்தறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இந்தக்கருத்தை வெளியிட்டார் இந்தநிலையில் பெரும்பாலும் எதிர்வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் பொதுத்தேர்தலை நடத்தவேண்டி வரும் என குறிபப்pட்டார்.
தற்போதைய நிலையில் பொதுமக்கள் தமது சீவனோபாயத்தை மேற்கொள்ள பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்த அவர் இதன் காரணமாக விவசாயிகள் மீனவர்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக குறிபப்pட்டர் மின்சாரக்கட்டணங்கள் இந்த மாதம் முதல் இரட்டிப்பாக உயரவுள்ளது.
வட்டிவீதத்தின் அதிகரிப்பு பொதுமக்களினால் தாங்கிக்கொள்ளமுடியாத நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு உரிய வருமானம் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல அரசதுறையில் பாரிய ஊழல்கள் குறிப்பாக பசளைக்கூட்டுதாபன ஊழல் மிக் விமான கொள்வனவு ஊழல்மிஹின் எயார் மற்றும் டெலிகொம் ஆகிய நிறுவனங்களில் குளறுபடி என்பன இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளாhர்