வெள்ளை சிற்றூர்தியில் சென்ற இனம் தெரியாத ஆயுததாரிகளால் மலையகத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை கடத்திச் செல்லப்ட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது கடத்திச் செல்லப்பட்டவர் 26 அகவையுடைய எம்.தர்மராஜா எனத்தெரியவருகிறது. பேரூந்தில் பயணம் செய்த இவரை மூபன்வெளி பகுதியில் வழிமறித்த ஆயுததாரிகள் பலவந்தமாக தமது வாகனத்தில் இவரை ஏற்றிச்சென்றுள்ளதாக அறியமுடிகிறது. இவர் மொனாறகல மாவட்டம் கும்புக்கன் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.