பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுவினை உயர்நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுள்ளது. தனது கைதும், தடுத்து வைப்பும் சட்டவிரோதமானது என்று உத்தரவிடுவதுடன் நட்டஈடு வழங்க வேண்டுமென கோரியே ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அடிப்படை மனித உரிமைமீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
அடிப்படை மனித உரிமைமீறல் மனுமீதான பூர்வாங்க விசாரணை நேற்று நடைபெற்ற போதே மனுவினை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதேவேளை, கொட்டாஞ்சேனையில் இவருடன் கைது செய்யப்பட்ட செய்தி இணையத்தளத்தில் பணியாற்றிய மூவர் நேற்று பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.