20-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கு இணைப்பை துண்டித்து கிழக்கை தனிமாகாணமாக பிரகடனப்படுத்தியதை கண்டித்தே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரித்தாளும் கொள்கைக்கு உடன்படப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இணைக்கப்பட்ட வடக்குகிழக்கில் ஒரு நிர்வாக அலகு என்பதே நிலையான கொள்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கிழக்கு மாகாண சபைத்தேர்தலை புறக்கணித்தமை தொடர்பான அறிவித்தல் விரைவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பங்கேற்பது என்பது தமிழ் மக்களின் கடப்பாட்டு உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு சமனாகும். ஸ்ரீலங்கா அரசாங்கம், அடிப்படையில் இந்திய ஸ்ரீலங்கா உடன்பாட்டை மீறியநிலையிலேயே வடக்குகிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரித்தது. இந்தநிலையில் இரண்டு மாகாணங்களினது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வாழ்வுரிமையை அபிலாசையை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் வலியுறுத்தவேண்டும் என ஜெயாநந்தமூர்த்தி கோரியுள்ளார் .வடக்குகிழக்கு மாகாணங்களுக்கான விசேட ஏற்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வருவது, சமாதான அடைதலில் பாரிய பயங்கரநிலையை தோற்றுவிக்கும் என இணைத்தலைமை நாடுகள் எச்சரித்துள்ளமையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயாநந்தமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார் இதேவேளை கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியகட்சியும் ஜே வி பியும் தீர்மானித்துள்ளன. அரசாங்கம் தேர்தலுக்கான உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜே வி பியும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட தீhமானித்துள்ளது.ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள தமது கட்சி அதனை அடிப்பiடாகக்கொண்டே கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்தாக ஜே வி பியின் நாடர்ளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் இந்தநிலையில் குறித்த இரண்டு கட்சிகளும் நடந்துமுடிந்த கிழக்கு மாகாண உள்ளுராட்சி தேர்தலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
|