இலங்கையில் நீண்ட காலமாக புரையோடி போய் இருக்கும் இனப்பிரச்சினைக்கு அதிகாரபகிர்வு ஒன்றை வரயறை
செய்து கொள்வதற்கு வசதியாக இலங்கை அரசியல் சாசனத்தில் இருக்கும் 17 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கு அதனை பாரளுமன்ற தெரிவுக்குழு சிபாரிசு செய்துள்ளதாக பாராளுமன்ற விவகார அரசியல் சாசன அமைசசர் டி.இ,டபிள்யு குணசேகர தெரிவித்துள்ளதாக 'ஐலண்ட் இணையம்' செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த யூலையில் நாம் இது தொடர்பான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு நாம் எமது அரசாங்கத்துடன் இரண்டு அல்லது மூன்று சந்திப்புகளை தான் நடத்த இருக்கிறோம். ஆனால் பராளுமன்றத்தில் இதனை முன்மொழிவதற்கு தேவை என்பதையும் அவர் வலியுறுத்தி உள்ளார், என 'ஐலண்ட் இணையம்' மேலும் தெரிவித்துள்ளது.